புஷ்ஷை நெருங்குகிறார் கோர்
புளோரிடா:
புளோரிடா மாகாணத்தில் நடக்கும் மறுவாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜ் புஷ்சுக்கும் அல்கோருக்கும் இடையிலானவாக்கு வித்தியாசம் குறைந்து கொண்ட வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து 3 நாட்கள் ஆன பின்னரும் யார் வெற்றி பெற்றது என்பதை முடிவு செய்யமுடியவில்லை. இருவரும் சம பலத்தில் உள்ள நிலையில் புளோரிடாவில் கிடைக்கும் வெற்றி தான் அதிபரை முடிவுசெய்யும் நிலை இருந்தது.
ஆனால், இங்கும் வாக்கு எண்ணிக்கையில் புஷ் வெறும் 1,800 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றதால் மறுவாக்குஎண்ணிக்கை நடக்கிறது. சுமார் 60,00,000 வாக்குகள் திரும்ப எண்ணப்படுகின்றன.
இந்த மறுவாக்கு எண்ணிக்கையில் அல்கோர் முன்பு பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றுவருகிறார். முன்பு 1,784 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கிய அல்கோர் இப்போது வெளளிக்கிழமை காலைவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் வெறும் 229 வாக்குகள் வித்தியாசத்தில் தான் புஷ்சை விட பின்தங்கியிருக்கிறார்.
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. புளோரிடாவில் மொத்தம் உள்ள 67 கவுண்டிகளில் 53ல்வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. மேலும் 14 கவுண்டிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.இவற்றை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தான் எண்ணி முடிக்க முடியும் எனத் தெரிகிறது.
இது தவிர வெளிநாடுகளில் வசிக்கும் புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்கர்களின் 2,700 வாக்குகள் வந்து சேர சிலநாட்கள் ஆகும்.
இது தவிர புளோரிடாவில் உள்ள பாம்பீச் கவுண்டி பகுதியில் வாக்குச் சீட்டு குழப்பமாக இருந்ததால்பல்லாயிரக்கணக்கானவர்கள் சரியாக வாக்களிக்கவில்லை எனவும் புகார் கிளம்பியுள்ளது. சரியாக வாக்களிக்காதசுமார் 19,120 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
மொத்தம் 270 எலெக்டோரல் காலேஜ் வாக்குகளை வெல்பவர் தான் அடுத்த அதிபராக முடியும். இப்போதுஇருவரும் கிட்டத்தட்ட சம பலத்தில் உள்ளனர். புளோரிடாவில் 25 எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன.இதை யார் வெல்கிறார்களோ அவர் தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications