327 வாக்குகள் வித்தியாசத்தில் புஷ் முன்னணி

Subscribe to Oneindia Tamil

புளோரிடா:

புளோரிடாவில் நடந்து வந்த மறுவாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. இதில் குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் 327வாக்குகள் வித்தியாசத்தில் துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான அல்கோரைவென்றுள்ளார்.

இந்த வாக்கு விவரம் அதிகாரப்பூர்வமானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அசோசியேட் பிரஸ் நிறுவனம் நடத்தியகருத்துக் கணிப்பில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

எப்படி இருந்தாலும் வெளிநாட்டில் வசிக்கும் புளோரிடாவாசிகளின் தபால் வாக்குகளும் வந்து சேர்ந்த பின்னர்தான் இறுதி முடிவை அம் மாகாண தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாகும்.

இது தவிர புளோரிடாவின் 4 கவுண்டிகளில் மேலும் ஒருமுறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனஜனநாயகக் கட்சி கோரியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.

வாக்குச் சீட்டில் பிரச்சனை இருந்ததாகக் கூறி வழக்குத் தொடந்துள்ள பொதுமக்களுக்கும் ஜனநாயகக் கட்சி ஆதரவுதெரிவித்துள்ளது. இதுவரை 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்றம் விசாரணைக்குஎடுத்துக் கொண்டால் தேர்தல் முடிவு மேலும் தாமதமாகும்.

இந் நிலையில் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் பல்வேறு முயற்சிகள் மூலம் குழப்பம் செய்து வருகிறார் கோர்என ஜார்ஜ் புஷ்சின் ஆதரவாளர்கள் புகார் கூற ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், வெறம் 327 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ள நிலையில், புளோரிடாவில் வாக்குஎண்ணிக்கையின்போது செல்லாத ஓட்டுகளாக நிராகரிக்கப்பட்ட 19,000 வாக்குகள் மிகுந்த முக்கியத்துவம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் வசிப்பவர்களின் தபால் வாக்குகளும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் மிகுந்தமுக்கியத்துவம் பெற்றுள்ளன.

பீச் கேண்டி பகுதியில் வாக்குச் சீட்டு சரியாக இல்லாததால் தான் 19,000 மக்களும் சரியாக வாக்களிக்கவில்லை.இதனால் தான் அவை செல்லாத ஒட்டுகளாகின என அல்கோர் கட்சி கூறுகிறது. மேலும் இந்தப் பகுதியில்மறுபடியும் தேர்தல் நடத்தவும் கோருகிறார்கள் கோர் கட்சியினர்.

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் இந்தியாவில் ஏற்படும் அரசியல் குழப்பத்தை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது அமெரிக்கா. இந்த விஷயத்தில் மட்டும் இந்தியா அடைந்து வந்த வெற்றியையும் அமெரிக்காபறித்துவிட்டது!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+