வருகிறது வங்கிகள் வேலை நிறுத்தம்
டெல்லி:
வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நவம்பர் 15ம் தேதியும் 20ம்தேதியும் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர்.
பொதுத்துறையில் உள்ள வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக இந்தவங்கிகளில் தான் செய்துள்ள 51 சதவீத முதலீட்டை தனியாருக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளது.
இதை எதிர்த்து வரும் தொழிசங்கங்களுடன் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேச்சு வார்த்தை நடத்தினார்.ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது.
தனியார்மயமாக்குவது மட்டுமல்லாமல் வங்கி ஊழயர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58ஆகக்குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தவிர ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தையும் (வி.ஆர்.எஸ்.)அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர்.
வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்ட மசோதாவை அரசு கொணடுவரஉள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் வங்கிகளில் அரசின் முதலீடு 51 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாகக் குறையயும்.67 சதவீதப் பங்குகள் தனியாரிடம் சென்றுவிடும். வங்கிகள் தனியார்மயமாகிவிடும்.
இதனால் நவம்பர் 20ம் தேதியும் முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அரசின் இந்த முடிவு நாட்டின் நலனுக்கும், இந்தியப் பொருளாதாரத்துக்கும், உழைத்துவரும் வங்கி ஊழியர்களின்நலனுக்கும் எதிரானது எனவும் வங்கிகளில் முதலீடு செய்துள்ள பொதுமக்களின் பணத்துக்கு இனி பாதுகாப்புஇருக்காது எனவும் வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications