சியோரா லியோனில் போர்நிறுத்தம்...அரசு அறிவிப்பு
ப்ரீடவுன்:
சியோரா லியோனில் போர் நிறுத்தம் செய்ய அரசு ஒத்துக் கொண்டுள்ளதாக ரேடியோ செய்திகள் தெரிவிக்கின்றன.
சியோரா லியோனில், கடந்த 9 வருடங்களாக ராணுவ வீரர்களுக்கும், புரட்சிகர ஐக்கிய முன்னணி படையினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவருகிறது. இதனால் நாளுக்கு நாள் ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றன.
சமரசம் செய்வதற்காக ஐ.நா. பலமுறை முயற்சி செய்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சியோரா லியோனில் மீண்டும் அமைதியைஏற்படுத்தும் நோக்கத்தில் போர்நிறுத்தம் செய்வது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய தலைநகர் அபுஜாவில், புரட்சிகர ஐக்கிய முன்னணி மற்றும் அரசுத்தரப்பு பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்படி சனிக்கிழமைமுதல் போர்நிறுத்தம் செய்யப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தம் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த மே மாதம் அரசுத் தரப்பு பிரதிநிதிகளும், புரட்சிகர ஐக்கிய முன்னணியினரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications