உடல் நலம் தேறி வருகிறார் மாறன்
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை செய்திகள்தெரிவித்துள்ளன.
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மைக்ரேயின் எனப்படும் ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் உடனடியாக சென்னை அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அப்பல்லோ டாக்டர் ரெட்டி அவருக்குசிகிச்சையளித்தார். இதையடுத்து லண்டனில் பணிபுரியம் ஜெர்மன் டாக்டர் ஹார்ஸ்ட் ஹோன் சென்னை வந்து மாறனின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து பார்த்தார்.
அவர் கூறுகையில் மாறனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் இன்னும் 15 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
கார்டியோ-மயோபதி என்னும் இதய பலவீனம் காரணமாக மாறனின் இடப்பக்க இதயம் சரிவர இயங்கவில்லை. மேலும் நுரையீரலில் அடைப்புஏற்பட்டுள்ளதால் அவருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.
மாறன் தொடர்ந்து செயற்கை சுவாசத்திலேயே இருந்து வருகிறார். அவருக்கு செப்டல் அப்லேஷ் என்ற நவீன முறைப்படி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்று நம்பலாம் என்றார்.
மாறன் குணம் பெற முஸ்லிம்கள் பிரார்த்தனை
முரசொலி மாறன் உடல் நலம் பெற வேண்டி 16 ஆயிரம் மசூதிகளில் இஸ்லாமிய மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.
இது குறித்து அகில இந்திய முஸ்லிம் ஷரியத் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நலக் குறைவை கண்டு தமிழக மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் அதிக கவலை அடைந்துள்ளனர்.
அகில இந்திய ஷரியத் வாரியத்தின் தமிழக அமைப்பு கவலை அடைந்துள்ளது. தமிழக முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையன்று விசேஷ தொழுகையின் போது கூட்டுப்பிரார்த்தனை முலமே அல்லது தனியாகவோ மாறனின் உடல் நலம் பூரண குணம் அடைய வேண்டி தமிழகத்தில் உள்ள 16 ஆயிரம் மசூதிகளில் பிரார்த்தனைநடத்தப்பட்டது.
மாறனின் உடல் முழுமையான அளவில் சுகம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கப்பட்டது. அவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவார் என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி மாறன் உடல் நலம் பெற வேண்டி 16 ஆயிரம் மசூதிகளில் இஸ்லாமிய மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.
இது குறித்து அகில இந்திய முஸ்லிம் ஷரியத் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நலக் குறைவை கண்டு தமிழக மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள்அதிக கவலை அடைந்துள்ளனர்.
அகில இந்திய ஷரியத் வாரியத்தின் தமிழக அமைப்பு கவலை அடைந்துள்ளது. தமிழக முஸ்லிம்கள்வெள்ளிக்கிழமையன்று விசேஷ தொழுகையின் போது கூட்டுப் பிரார்த்தனை முலமே அல்லது தனியாகவோமாறனின் உடல் நலம் பூரண குணம் அடைய வேண்டி தமிழகத்தில் உள்ள 16 ஆயிரம் மசூதிகளில் பிரார்த்தனைநடத்தப்பட்டது.
மாறனின் உடல் முழுமையான அளவில் சுகம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கப்பட்டது. அவர் விரைவில் குணம்பெற்று வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications