தப்புக் கணக்குப் போடாதீர்கள் .. தனுஷ்கோடி ஆதித்தன்
ஈரோடு:
தமிழ் மாநிலக் காங்கிரசை சாதாரணக் கட்சியாக நினைக்க வேண்டாம், நாங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலையில் இல்லை என முன்னாள்அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடிஆதித்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கும். தனித்து நின்று போட்டியிட்டாலும், கூட்டணி ஆட்சிஅமைந்தால் அந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் மூப்பனார் முடிவு செய்வார். அதற்குமுன் மதச்சார்பற்ற கட்சிகளுடன் மகாக் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். மதச் சார்பற்றவர்களின் ஓட்டுகள்சிதறிவிடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் பிரியும் முன்பு இருந்த காங்கிரசை விட இப்போது த.மா.கா., வலிமையான கட்சியாக உள்ளது. கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது.எனவே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைை சாதாரணக் கட்சியாக நினைக்க வேண்டாம். தப்புக் கணக்குப் போட வேண்டாம். நாங்கள் யாரிடமும்கையேந்த வேண்டிய நிலையில் இல்லை. கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
ஊழல், ஊழல் என எம். ஜி.ஆர்., கருணாநிதியை விரட்டினார். ஜெயலலிதாவை ஊழல், ஊழல் என கருணாநிதி விரட்டினார். இப்போது கருணாநிதியின்ஆட்சியில் ஊழல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கருணாநிதி அறிவியல்பூர்வமாக ஊழல் செய்து வருகிறார். கொப்பரைத் தேங்காய் கொள்முதலில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. இந்தஊழல் குறித்து ஆய்வு நடத்தி மேலிடத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம்.
உழவர் சந்தை வெறும் கண்துடைப்பாக இருந்து வருகிறது. இப்போது தக்காளி விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை உழவர்சந்தை மூலம் ஏன் குறைக்க முடியவில்லை?
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. மூடிய மில்கள் திறக்கப்படவில்லை. நெசவாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை வலியுறுத்திதொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார் தனுஷ்கோடி ஆதித்தன்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்











Click it and Unblock the Notifications