பெண் டாக்டரை தாக்கிய போலீஸ்காரர்
கோவை:
ஊசி போட வந்த பெண் டாக்டரை சங்கிலியால் தாக்கிய மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரரை, போலீசார் கைதுசெய்தனர்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை வின்சன்ட் ரோட்டில் பணியில் ஈடுபட்டிருந்தமதுரையைச் சேர்ந்த கருணாகரன் என்ற படை வீரர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் பணியிலிருந்த டாக்டர் மாலதி, கருணாகரனுக்கு ஊசி போட முயன்றுள்ளார். அதற்குகருணாகரன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எனக்கே ஊசி போடப் பார்க்கிறாயா? என மிரட்டியுள்ளார். மேலும்தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் சங்கிலியால் தாக்கியுள்ளார். இதில்டாக்டர் மாலதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாலதி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.போலீஸார், கருணாகரனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications