குடும்பத்தை விட கட்சிதான் பெரிது .. கருணாநிதி
சென்னை:
என் குடும்பத்தை விட எனக்கு கட்சி தான் பெரியது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் திங்கள்கிழமை துணை நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்திற்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக மதுரையில் நடந்த சம்பவம் பற்றி இங்கே பேசப்பட்டது. மதுரையில் நடந்தது கட்சி சண்டை அல்ல. குடும்பச்சண்டை என்றும் சொன்னார்கள்.
எல்லா கட்சிகளிலும் குடும்பச் சண்டை இருக்கிறது. எந்த கட்சியில் குடும்பச் சண்டை இல்லை? சொல்லுங்கள் பார்க்கலாம். தேசிய கட்சியிலும்இருக்கிறது. மாநிலக் கட்சியிலும் இருக்கிறது இந்தப் பிரச்சனை. எனவே திமுக விவகாரத்தை மட்டும் பூதக் கண்ணாடி போட்டு பார்க்காதீர்கள்என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதற்காக, நான் குடும்பத்திற்காக வக்காலத்து வாங்குகிறேன் என்று யாரும் கருதிட வேண்டாம். என்னிடம் குடும்பம் பெரிதா அல்லது கட்சி பெரிதாஎன்று கேட்டால், கட்சிதான் பெரிது என்பேன். அதனால் தான் மதுரையில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து 8 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications