கொலையும் செய்வாள் பத்தினி!
சென்னை:
பிடிக்காத கணவரை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
அறந்தாங்கி அருகே திருக்கல்யாணபுரத்தைச் சேர்ந்த ராஜூவுக்கும், வேளாங்கண்ணி என்ற வேளாணிக்கும் 3 மாதம் முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போதோ மாப்பிள்ளை ராஜூவை, வேளாணிக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், பெற்றோர் வற்புறுத்தலால் கழுத்தை நீட்டினார்.
திருமணத்திற்கு பின்பு அந்த கோபத்தையெல்லாம் கணவரிடம் காட்டினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார் வேளாணி.
கல்யாணம் முடிந்ததும் ஓரிரு மாதங்களில் மனைவி பிரிந்து சென்று விட்டாளே என்று மன வருத்தமடைந்த ராஜூ, நேராக மாமனார் வீட்டுக்குச்சென்றார். மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டார்.
அதன்படி, மாமனாரும் தனது மகள் வேளாணியை சமாதானப்படுத்தி மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்தார். அப்போது ராஜூவுடன், செல்ல வேளாணிமறுத்தார். அவரை எனக்கு பிடிக்கவில்லை. என்னை விட்டு விடுங்கள் என்று கூறினார். ஆனால், தந்தையோ கொஞ்ச நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.
கணவருடன், வேண்டா வெறுப்பாக வீட்டுக்கு வந்த வேளாணி மனம் மாறவில்லை. பிடிக்காத கணவருடன் வாழவும் பிடிக்கவில்லை. சாகவும்பிடிக்கவில்லை. அதனால் மனம் குமுறினார். அந்தக் குமுறல் வெறியானது. பிடிக்காத கணவனைத் தீர்த்துக் கட்டி விட திட்டம் போட்டார் மனைவி.
சம்பவத்தன்று, இரவு கணவருக்கு சாப்பாடு பரிமாறினார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பின் பக்கமாக நின்று கொண்டு அவரது உடலில்மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்து விட்டார். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவர் துடித்தார். அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து அவரைமருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
போலீஸார் வேளாணி மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications