சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு
சென்னை:
திருநெல்வேலியில் 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மோகன் கமிஷன் அறிக்கையை சட்டசபையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி திங்கள்கிழமை கிழித்து எறிந்தார்.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஊர்வலம்நடைபெற்றது.
கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 17 பேர் ஆற்றில் விழுந்துஇறந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன்தனது விசாரணையை முடித்து தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஊர்வலம்நடைபெற்றது. கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 17 பேர் ஆற்றில்விழுந்து இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன்தனது விசாரணையை முடித்து தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையை சட்டசபையில் அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அறிக்கையில் போலீஸார் நடத்திய தடியடி நியாயமானது என்றும்,இறந்தவர்கள் 17 பேரும் தவறாக வழி காட்டப்பட்டு விட்டனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி சபையில் வலியுறுத்தினார். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்தார்.இதையடுத்து கமிஷன் அறிக்கையை கிழித்தெறிந்து விட்டு சபையை விட்டு வெளிநடப்புச் செய்தார் கிருஷ்ணசாமி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications