வாக்குகளை கையால் எண்ணலாமா? நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டல்ஹெளசி (அமெரிக்கா):
புளோரிடா மாநிலம் பாம் பீச் கவுன்டியில் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பதிவானவாக்குகளை கையால் எண்ணுவதை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் தொடரப்பட்டுள்ளவழக்கில், ஜனநாயகக் கட்சியினர் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரின் செய்தித்தொடர்பாளர் டாக் ஹாட்டவேஇதுகுறித்துக் கூறுகையில், மக்களால் போடப்பட்ட வாக்குகளை எண்ணக் கூடாது என்றுகூற நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இதை எங்களது வாதத்தில் எடுத்து வைப்போம்என்றார்.
பல்வேறு குழப்பம் காரணமாக அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் குழப்பம்ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். புளோரிடா மாநிலம் பாம் பீச் உள்பட சிலபகுதிகளில் வாக்குச் சீட்டுக்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்துபாம்பீச் உள்ளிட்ட சில கவுன்டிகளில் பதிவான வாக்குகளை கையால் எண்ணஉத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் வில்லியம் புஷ் ஜூனியர் சார்பில்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வாக்குகளை கையால் எண்ண உத்தரவிட்டால்அது ஜனநாயகத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று புஷ் தனது மனுவில்கூறியிருந்தார். புஷ் தவிர, துணை அதிபருக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் செனி மற்றும்7 வாக்காளர்கள் இதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
மியாமியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் ஞாயிற்றுக்கிழமை காலைஉள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
புளோரிடா மாநிலத்திலிருந்து 25 ஓட்டுக்கள் யாருக்குக் கிடைக்கிறதோ அவரே அதிபர்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே புஷ்ஷும், கோரும்சட்டரீதியாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்து, நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை.கோருக்கும், புஷ்ஷுக்கும்இந்த வாக்குகள் இன்னும் கிடைக்கவில்லை. ஒட்டு மொத்தவாக்குகள் எண்ணிக்கையில், கோர் லேசான முன்னிலையில் இருக்கிறார். ஆனால்புளோரிடா மாநில வாக்குகள் எண்ணிக்கையில், புஷ் சில நூறு ஓட்டுக்கள் முன்னிலையில்இருக்கிறார். இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
புளோரிடா மாநில தேர்தல் சட்டப்படி, இரு வேட்பாளர்களுக்கும் இடையே மிகக் குறைந்தவாக்குகளே வித்தியாசம் இருந்ததால், வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications