அத்வானியை அணுகியது கர்நாடகம்
பெங்களூர்:
பெங்களூர் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை, கர்நாடக காவல் துறை அமைச்சர் மல்லிகார்ஜூனகார்கே சந்தித்துப் பேசி, நடிகர் ராஜ்குமாரை விரைவில் மீட்க தமிழக அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடந்த கனக ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி வந்திருந்தார். விழா முடிந்ததும் அவர் பெங்களூர் வழியே டெல்லி சென்றார்.
அவரை கர்நாடக கர்நாடக காவல்துறை அமைச்சர் கார்கே பெங்களூர் விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்னர் அத்வானியும், கார்கேயும் சுமார் 30 நிமிடங்கள் பேசினர். அப்போது, கார்கே, வீரப்பனால் கடத்தப்பட்டநடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக இரு மாநில அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
பின்னர் நடிகர் ராஜ்குமாரை மீட்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வற்புறுத்த வேண்டும் என்றும், இதற்குமத்திய அரசு உதவ வேண்டும் என்றும் அத்வானியிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதிலளித்த அத்வானி, ஏற்கனவே இதுகுறித்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சுநடத்தியிருக்கிறேன். மேலும் வலியுறுத்துகிறேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications