திமுக பிரமுகர் மகன் வெட்டிக் கொலை
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு தி.மு.க. ஒன்றிய துணைச் செயலர் மகனை, முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
திருச்செங்கோடு வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பரமானந்தம் (61). இவர் திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. கூடுதல் செயலாளராக இருந்து வருகிறார்.இவரது மகன் பாண்டியன் (26). பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறை சென்று வந்தனர். குண்டர் தடைச் சட்டத்தின் கீழும் ஓராண்டு சிறையில் இருந்துள்ளார்.
திருச்செங்கோட்டில் வீட்டின் முன்பு பாண்டியன் மற்றும் அவரது தந்தை பரமானந்தம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல்ஒன்று கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. தந்தை, மகன் இருவரையும் சரமாரியாக வெட்டியது.
படுகாயமடைந்த இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பாண்டியன் இறந்து போனார். பரமானந்தம் தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications