கோபால் எங்கே?
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குச் சென்றதாக நக்கீரன் கோபால் வீரப்பன் உள்ள சத்தியமங்கலம் காட்டுக்கு இன்னும்செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக அவரும் காட்டுக்குக் கிளம்பி, நெடுமாறன் குழுவினர் தலைமலைக் காடடில் சேர்ந்து கொண்டார் என்றுகூறப்பட்டது. ஆனால் நக்கீரன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, வீரப்பனிடமிருந்து அவருக்குஇன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ராஜ்குமார் மீட்பு தொடர்பாக நக்கீரன் கோபால் முதலிலிருந்தே அரசுத் தூதராக காட்டுக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். பின்னர் வீரப்பனுடன் உள்ள தமிழ்த் தீவிரவாதிகளின் கோரிக்கைப்படி நெடுமாறன்தலைமையிலான மூவர் குழுவும், கோபாலுடன் சேர்ந்து காட்டுக்குச் சென்றது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நெடுமாறன் குழு காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது. ஆனால்இவர்களுடன் கோபால் செல்லவில்லை. அவருக்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்றுகூறப்பட்டது. எனவே அவர் சென்னையிலேயே இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், திங்கள்கிழமை இரவு நக்கீரன் அலுவலகத்திற்கு வீரப்பன் அனுப்பிய ஆடியோ கேசட்வந்தது. அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. கேசட் முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டது. கேசட் வந்ததையடுத்து கோபால் காட்டுக்குக் கிளம்பிச் சென்றதாகவும், தலைமலைக் காட்டில்அவரும், நெடுமாறன் குழுவினரும் வீரப்பன் சிக்னலுக்காக காத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால் கோபால் இன்னும் காட்டுக்குக் கிளம்பிச் செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. நக்கீரன்உதவிஆசிரியர் காமராஜ் இதுகுறித்துக் கூறுகையில், கோபாலுக்கு இன்னும் வீரப்பனிடமிருந்து சிக்னல் வரவில்லை.வந்தால் போவார் என்றார்.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அன்பரசு மற்றும் நான்கு பேர் அடங்கிய காங்கிரஸ் குழுகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசியுள்ளது. தாங்கள் காட்டுக்குச் செல்லத் தயாராகஇருப்பதாகவும் ராஜ்குமாரை மீட்க தங்களது ஆதரவு எப்போதும் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக அரசுடன் பேசுவதாக கிருஷ்ணாவும், மாநில காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும்உறுதியளித்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications