உருவானது 100-வது உழவர் சந்தை
சென்னை:
சென்னை பல்லாவரத்தில் 100 வது உழவர் சந்தையை முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார்.
காய்கறிகள், பழங்கள் முதலான வேளாண் விளைப்பொருட்களை இடைத் தரகர்கள், வணிகர்கள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் உழவர்கள் நேரிடையாகமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில், உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் கருணாநிதி இந்தப் புதிய திட்டம் குறித்து அறிவித்தார். மாநிலத்தில் உள்ள நகர்புறங்களில் பலஇடங்களில் உழவர் சந்தைகள் நிறுவப்படும் என்றும் கருணாநிதி கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி, நேரு பிறந்த நாளன்று முதல் உழவர் சந்தையை மதுரையில் முதல் அமைச்சர் கருணாநிதி தொடங்கி, வைத்தார்.அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மளமளவென உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.
இதுவரை 99 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த 99 உழவர் சந்தைகளில் இதுவரை 16 கோடியே 93 லட்சத்து 36 ஆயிரத்து 963 கிலோகாய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை விற்பனை ஆகியுள்ள காய்கறிகளின் விலை மதிப்பு 112 கோடியே 85 லட்சத்து 35 ஆயிரத்து 326 ரூபாயாகும். 13.5 லட்சம் விவசாயிகள் தங்கள்விளைபொருட்களை யார் குறுக்கீடும் இல்லாமல் 99 உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்றுள்ளனர்.
மற்ற இடங்களை விட உழவர் சந்தைகளில் விலை குறைவு என்பதால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைத்தது. இதுவரை சுமார் 5 கோடி பேர்உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்கி பயன் அடைந்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு இதே தினத்தன்று முதல் உழவர் சந்தையை தொடங்கி வைத்தபோது. ஓராண்டுக்குள் 100 உழவர் சந்தைகள்திறக்கப்படும் என்று கூறி இருந்தார்.
அவர் அறிவித்தபடி, செவ்வாய்க்கிழமை சென்னை பல்லாவரத்தில் தமிழகத்தின் 100 வது உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது.
முதல் அமைச்சர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை காலை 100 வது உழவர் சந்தையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் காய்கறிவிற்பனையையும் தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி,சுந்தரம், சண்முகம் எம்எல்ஏ மற்றும் பலர் விழாவில் பேசினார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications