பதவி நீட்டிப்பு கொடுத்திருக்கலாம் .. கெய்க்வாட் ஆதங்கம்
தாக்கா:
எனக்கு இன்னும் கொஞ்சம் பதவி நீட்டிப்பு கொடுத்திருக்கலாம் என்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் கூறியுள்ளார்.
தாக்காவில் நடந்த வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டிதான், இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட்கலந்து கொண்ட கடைசிப் போட்டியாகும். இதையடுத்து போட்டி முடிவில் கேப்டன் கங்குலி மற்றும்இந்தியவீரர்கள் சார்பில் பிரிவுபசார நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்டு கெய்க்வாட் பேசுகையில், இந்திய அணியில் இப்போதுள்ள கட்டுப்பாடு எதிர்காலத்திலும்தொடர வேண்டும். நான் இன்னும் கொஞ்ச காலம் பயிற்சியாளராக இருந்திருக்கலாம்.
வெற்றியுடன் எனது பணியை முடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் முறை நான் பயிற்சியாளராகநியமிக்கப்பட்டிருந்தபோது, என்னிடம் பல திட்டங்கள் இருந்தது. படிப்படியாக அவற்றை நிறைவேற்ற முடிவுசெய்திருந்தேன். ஆனால் அதற்குள் எனது முதல் கான்டிராக்ட் முடிவு பெற்று விட்டது.
மறுபடியும் கபில் தேவிற்குப் பிறகு மீண்டும் பயிற்சியாளர் ஆனேன். ஆனால் இப்போதும் நீட்டிப்பு தராமல்முடித்து விட்டனர். இருந்தாலும் வருத்தமில்லை. இப்போதுள்ள அணி அப்படியே நீடித்தால் நிச்சயம் வெற்றிகள்குவியும் என்றார்.
கபில் தேவுக்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் கெய்க்வாட். ஆனால் சில மாதங்களுக்குமுன்பு மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல புகார்கள் தொடர்பாக கபில் தேவ் பதவி விலகினார். இதையடுத்துகெய்க்வாட் மீண்டும் பயிற்சியாராக நியமிக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications