போலீஸிடமிருந்து தப்பியவர் கிணற்றில் விழுந்து சாவு
கோவை:
கோவை அருகே போலி மது கடத்திச் சென்ற மினி லாரியைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். போலீசாரின்சோதனைக்குப் பயந்து ஓடியவர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்.
ரூ. 10லட்சம் மதிப்புள்ள மினி லாரி மற்றும் போலி மதுவைப் போலீசார் கைப்பற்றினர். தமிழகத்தில் பிராந்திக்கடைகளுக்கு தமிழ்நாடு அரசு மூலம் மொத்தமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஆயத்தீர்வைஉண்டு.
இந்நிலையில் பல்லடம் பகுதிகளில் உள்ள மதுக் கடைகளில் மது விற்பனை குறைந்து வருவதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்துப் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பல்லடம் அருகே அண்ணாநகரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக டயோட்டா வேன்ஒன்று வேகமாக வந்தது. இதைப் போலீசார் தடுத்தபோது மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. வேனைத் துரத்திச்சென்ற போலீசார் பல்லடம் ரோட்டில் மற்றொரு இடத்தில் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த வேனில் இருந்த டிரைவர் வெள்ளியங்கிரி (26), வேனில் இருந்து இறங்கி ஓட முயன்றார்.போலீசார் அவரை வளைத்துப் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் வேனில் 175 பெட்டிகளில் 960 விஸ்கிபாட்டில்கள் இருந்தன. போலீஸ் விசாரணையின்போது, மது பாட்டில்களின் உரிமையாளர்கள் பழனிச்சாமி,துரைசாமி ஆகியோர் வேனிலிருந்து தப்பி ஓடினர்.
இதில் பழனிச்சாமி என்பவர் தப்பி ஓடியபோது சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்தார். விழுந்த வேகத்தில்தலையில் அடிபட்டு இறந்தார். இவரை மீட்க போலீஸ்காரர் செல்வராஜ் முயன்றார். அவர் கிணற்றிற்குள் இறங்கமுயன்றபோது வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.
போலீசார், தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் வந்து பழனிச்சாமியின்உடலை மீட்டனர். காயமடைந்த போலீஸ்காரர் செல்வராஜ் திருப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், போலி மது பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தை போலீசார்கண்டுபிடித்து சோதனையிட்டனர். இதில், அரசு முத்திரையுடன் கூடிய போலி லேபிள்கள் கட்டுக் கட்டாகஇருப்பதை அறிந்தனர். இதனையும் கைப்பற்றினர்.
போலி மது தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட திருமண மண்டபம், வெள்ளக் கோயில் அருகே இருப்பதை அறிந்துஅங்கு போலீசார் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் 93 அட்டைப் பெட்டிகளில் போலி மது இருந்ததைக் கைப்பற்றினர். இது தொடர்பாக திருமணமண்டப அதிபர் குப்புசாமியை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட போலி மது, மினிலாரி ஆகியற்றின் மதிப்பு ரூ. 10லட்சமாகும். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications