திருச்சி பெண் சாமியாருக்கு ஆயுள் தண்டனை
திருச்சி:
திருச்சியில் ஆசிரமம் நடத்தி வந்த ஜெயந்தி மாதாஜிக்கும் அவரது கூட்டாளிகள்நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி கே.கே.நகரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஜெயந்தி. அவர் தன்னை மாதாஜி எனஅழைத்து வந்தார். அங்கு சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் நடந்து வந்ததாகவும்அதை வெளியிட்டு விடுவேன் என அங்கு பணி புரிந்த லீலாவதி என்பவர்சொன்னதால் அவரை ஜெயந்தியும் அங்கு இருந்த ஸ்ரீ புத்ரா என்பவரும் கொன்றாதாகபுகார் கூறப்பட்டது
ஆனால் ஜெயந்தியும், ஸ்ரீபுத்ராவும் இந்தப் புகாரை மறுத்தனர். லீலாவதிஇயற்கையாகவே இறந்து விட்டார். அவருக்கு உறவினர் இல்லாததால் அவரது உடலைநாங்கள் எரித்தோம் என கூறினர்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு செவ்வாய் கிழமையன்று அறிவிக்கப்பட்டது.
திருச்சி முதன்மை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துராமலிங்கம் தனது 71 பக்கதீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஜெயந்தியின் மீது செக்ஷன் 302-ன் கீழ் சுமத்தப்பட்டகுற்றம் சந்தேகத்திற்கு இடமின்றிநிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெயந்தியுடன் அவரது கூட்டாளிகளான ஸ்ரீபுத்ரா,ஸ்ரீபுத்ராவின் மகன் பெரிய சத்யநாராயணாவுக்கும், மாதாஜியின் மகனான சின்னசத்யநாராயணாவுககும், தினகரனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும் இவர்கள் அனைவரும் ரூ 2,000 அபராதத் தொகையாக கட்ட வேண்டும்.தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
செக்ஷன் 201-ன் படி நான்கு வருட கடுங்காவல் தண்டனையும், அபராதமாக ரூ 1,000மும் கட்ட வேண்டும். அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியிருந்தார்
வழக்கை விசாரித்த கே.கே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கும், துப்புதுலக்கிய அதிகாரி விக்டருக்கும் மாலை அணிவித்து சிலர் பாராட்டியதை சிலவழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிமன்ற வளாகத்தில் பதட்டம் நிலவியது
போலீசும் சில மூத்த வழக்கறிஞர்களும் தலையிட்ட பின் அமைதி திரும்பியது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications