காட்டுக்குள் ஒரு காத்திருப்பு
சத்தியமங்கலம்:
வீரப்பனைச் சந்திக்கச் சென்ற தூதுக்குழு, வீரப்பனின் சிக்னலுக்காக குண்டேரிப் பள்ளம் என்ற இடத்தில்காத்திருக்கிறது. வீரப்பனிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் காட்டுக்குள் தங்கள் பயணத்தை இவர்கள்தொடங்கவுள்ளனர்.
ராஜ்குமாரை மீட்க அரசியல்வாதிகள், ராஜ்குமாரின் குடும்பத்தினர், மற்றும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களின்வேண்டு கோளுக்கிணங்க தமிழர் தேசியக் கட்சியின் தலைவர் நெடுமாறன் தலைமையில் தூதுக்குழு காட்டுக்குபுறப்பட்டுச் சென்றுள்ளது. அரசு தூதராக 5 முறை காட்டுக்குள் பயணம் மேற்கொண்ட நக்கீரன் கோபால்இல்லாமல், நெடுமாறன் தலைமையிலான புதிய தூதுக் குழு காட்டுக்குள் வீரப்பனைச் சந்திக்க நுழைந்துள்ளது.
இந்த தூதுக்குழு சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தது. இவர்கள் கார் மூலம் கோபி,பங்களாப்புதூர், தூக்கநாயக்கன் பாளையம், வாணிப்புத்தூர் வழியாக கொங்கர்பாளையம் என்ற இடத்தைஅடைந்தனர். பின்னர் வீரப்பனின் சிக்னலுக்காக குண்டேரிப்பள்ளம் என்ற இடத்தில் காத்திருக்கின்றனர்.
இந்த இடத்திற்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். வீரப்பனிடமிருந்துதகவல் வந்ததும், இவர்கள் காட்டுக்குள் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், கொங்கர்பாளையம் அருகே உள்ள கிராமங்களில் உளவுத் துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். வீரப்பன் ஆட்களின் நடமாட்டம், அவனுக்கு உணவு செல்லும் வழி, தங்கியிருக்கும் இருப்பிடம்உள்பட பல்வேறு இடங்களைக் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது செல்லும் தூதுக்குழு வீரப்பனை சந்தித்து ராஜ்குமாரை மீட்காத பட்சத்தில் அதிரடி நடவடிக்கைகள் மூலம்ராஜ்குமார் மீட்க அதிரடிப் படையினரும் தயாராகி வருகின்றனர்.
நொடுமாறன் தலைமையில் செல்லும் இந்த தூதுக் குழு செல்வதே இறுதியானதாக இருக்கும் என அதிரடிப்படைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications