நாளை சபரிமலை நடை திறப்பு
சபரிமலை:
நடை மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பசாமி கோவில் நடை புதன்கிழமை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்வார்கள். குறிப்பாக, தமிழகத்திலிருந்துசபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு அய்யப்பசாமி கோவில் நடை திறக்கப்படுகிறது. கார்த்திகைமாதம் பிறக்கும் வியாழக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.
2001 ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். மண்டல பூஜை திருவிழா 22 ம் தேதி கொடியேற்றுத்துடன் நடைபெறும்.முன்னதாக, டிசம்பர் 1ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது.
தொடர்ந்து மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டிருப்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஜனவரி 14 ம் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கும். 20 ம் தேதி நடை மூடப்படும். விழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். உச்சிகாலபூஜை முடிந்ததும் நடை மூடப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications