ஜெ.வின் ஓரவஞ்சனை
சென்னை:
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற வந்த ஜெயலலிதாஜெயா டிவிக்கு மட்டும் பேட்டியளித்தார். ராஜ் டி.வியைப் புறக்கணித்தார்.
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனைவிதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கிதீரப்பளித்ததோடு அந்த ஜாமீனை தனி நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளும்படியும்உத்தரவிட்டிருந்தார்.
இதன் படி திங்கள் கிழமை மாலை தனது தோழி சசிகலாவுடன் ஜாமீன் பெறஜெயலலிதா தனி நீதிமன்றம் வந்திருந்தார். வழக்கமாக இருவரும் ஒரே நிறத்தில்சேலை அணிந்து வருவர். இந்த முறை இருவரும் வெவ்வேறு நிற சேலையில்வந்திருந்தது பலரையும் புருவம் உயர வைத்தது.
முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, பொன்னையன். செங்கோட்டையன்,ஜெயக்குமார் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். வக்கீல்கள் பிரிவுசெயலாளர் தளவாய் சுந்தரம், இணைச் செயலாளர் பிலிப் தாமஸ் ஆகியோரும்வந்திருந்தனர்.
ஜாமீன் பத்திரங்களை சமர்ப்பித்து விட்டு ஜெயலலிதா காருக்கு செல்லவும் அவரைபேட்டியெடுக்க ராஜ் டிவி நிருபர் மைக்குடன் சென்றார். அவர் மைக்கை பாதுகாப்புஅதிகாரி பிடித்திழுத்து பின்னால் போகுமாறு கூறினார். ஜெயா டிவி நிருபரை அழைத்துஜெயலலிதா பேட்டியளித்தார். அதை அருகில் நின்றிருந்த மற்ற நிருபர்களும் குறிப்புஎடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications