பிரசவத்திற்குப் பின் பெண் சாவு .. சேலத்தில் பரபரப்பு
சேலம்:
பிரசவத்திற்குப் பின் சிகிச்சை பெற்ற பெண் மருத்துவனையில் இறந்தார். நர்ஸ்களின் அலட்சியத்தால்தான் அவர் இறந்ததாகக் கூறி நஷ்ட ஈடு கோரி பெண்ணின்உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், ராசிபுரம் தேவேந்திரன் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (30). இவரது மனைவி மணிமேகலை (25). இந்த பெண்,பிரசவத்திற்காக ராசிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த மருத்துவமனையில் இவருக்கு சுகப் பிரசவம் நடந்தது. பெண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மணிமேகலை மயக்கமடைந்தார். இதனைத் தடுக்க மருத்துவமனையில் இருந்த நர்ஸ்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்தார். இதனால்,பெண்ணின் உடலை சிகிச்சை பெற்ற ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கே அவரது உறவினர்கள் எடுத்து வந்தனர்.
ராசிபுரம் மருத்துவமனையில், பிரசவத்திற்கான செலவை செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின்உறவினர்கள், நர்ஸ்களின் அலட்சியத்தால் தான் இந்த மரணம் ஏற்பட்டது எனக் கூறியும், அவரது இறப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கோரியும் மருத்துவமனை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் மணிமேகலையின் உடலை டாக்டர்கள் பெற்றுச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications