வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு .. கோருகிறது பாமக
கோவை:
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற எங்களது கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ஜி.கே மணி கோவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கோவையில் நடக்கவுள்ள 200 வது மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்க கோவை வந்த ஜி.கே மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். வீரப்பனைப் பிடிக்க இருமாநில அரசுகளும் பெரும் பொருட் செலவுகளை மேற் கொண்டுள்ளது.
வீரப்பன் மனம் திருந்தி நல்லவனாக மாற விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பொது மன்னிப்பு வழங்குவதில் தவறு இல்லை என்ற டாக்டர் ராமதாஸ்சின்கொள்கையில் மாற்றம் இல்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர், மீண்டும் தீவிரவாதச் செயல்களில் வீரப்பன் ஈடுபட்டால், உடனடியாகதண்டிக்கலாம்.
பா.ம.க நடத்தி வரும் மாவட்ட மாநாடுகளால் கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள பிரச்னைகளை அரசுக்குச் சொல்லி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம்.
இதனால் பொதுமக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. சிறுபான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது உரிமைக்காகக் குரல்கொடுத்து வருகிறோம்.
கோவையில் நடக்கவுள்ள 200 வது மாநாட்டில், டாக்டர் ராமதாஸ் முன்னின்று நடத்திய போராட்டங்கள் குறித்த கண்காட்சி இடம் பெறும். இதில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications