கட்சி தொடங்கினர் பொலிவிய இந்தியர்கள்
லா பாஸ் (பொலிவியா):
பொலிவியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் தங்களுக்கென புதிய அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளனர்.
500 வருடங்களுக்கு மேல் வெள்ளை இன மக்களால் கொடுமைப் படுத்தப்பட்டு வரும் நிலையை மாற்ற புதிய கட்சி துவங்கியுள்ளதாக இந்தியர்களின்தலைவர் பெலிப் க்யூஸ்பே வியாழக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் லா பாஸிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியர்கள் அதிகமாக வாழும் கிராமம் ஒன்றில் "பச்சகுடி இந்திய வம்சாவளி இயக்கம்என்ற அரசியல் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை உருவாக்கப்பட்டது.
இந்தக் கட்சியை போல்வியாவில் வாழும் இந்தியத் தலைவர் பெலிப் க்யூஸ்பே தொடங்கி வைத்தார். 10, 000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கட்சிதொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்டு பெலிப் க்யூஸ்பே பேசியதாவது:
பொலிவியாவின் மொத்த மக்கள் தொகை 80 லட்சமாகும். இதில் 60 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். அவர்களின் நலனிற்காகவும்,முன்னேற்றத்திற்காகவும் பச்சகுடி இந்திய வம்சாவளி இயக்கம் செயல்படும்.
புதிய கட்சியின் கொள்கையே பொய் சொல்லக் கூடாது. திருடர்கள் போல் செயல்படக் கூடாது. மிகவும் பலவீனமாக இருக்கக் கூடாது. தேச விரோதச்செயல்களில் ஈடுபடக் கூடாது ஆகியவையாகும். பச்சகுடி இயக்கம் வரும் 2002 ல் நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிடும்.
உலகத்திலேயே பெரு மற்றும் கொலம்பியா ஆகிய இரண்டு நாடுகளிலும் கோகோ இலை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. கோகோ இலைஉற்பத்தியில் பொலிவியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கோகோ இலை உற்பத்தியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த செப்டம்பர் மாதம்விவசாயிகள் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர். இது வன்முறையாக மாறியது.
இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 165 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோகோ இலை உற்பத்தியை முற்றிலுமாக நீக்கி விடக் கூடாது.மேலும், தென் அமெரிக்க நாடுகளிலேயே மிகவும் ஏழை நாடு பொலிவியா. இதனால் கோகோ இலை உற்பத்தியை அழிக்க அரசு முன்வரக் கூடாதுஎன்றார் பெலிப் க்யூஸ்பே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications