சட்டசபைத் தேர்தல்: பிளஸ்டூ தேர்வுகளில் மாற்றமா?
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடந்தாலும் ப்ளஸ் 2மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என தமிழகஅரசு தேர்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
ப்ளஸ் 2 வுக்கும், பத்தாவது வகுப்புக்கும் வழக்கமா மார்ச் மாதம் தேர்வுகள் துவங்கும்.ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிந்து விடும். தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மார்ச்அல்லது ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிநடைபெறுவதால் அதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால் ப்ளஸ் 2மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் எனகூறப்படுகிறது.
சில பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதத்திற்கு பதிலாக இந்த மாதமேநடத்தப்படுகிறது. தேர்வை முன்னதாக நடத்துமாறு தேர்வாணையத்திடமிருந்துசுற்றறிக்கை வந்துள்ளதாக சில பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் இதைதேர்வாணையம் மறுத்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது ஆசிரியர்கள் மற்றும்அரசு ஊழியர்கள்தேவைப்படுவார்கள் என்று மட்டுமே அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
எனவே தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். ப்ளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் முதல்வாரத்திலும், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகள் ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும். தேர்வுகள்நடக்கும் போது தேர்தல் நடந்தாலும் தேர்வுகள் பாதிக்கப்படாது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால் சிரமம்ஏற்படும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்இல்லாதபடி தேர்வு ஆணையம் பார்த்துக் கொள்ளும் என தேர்வுத் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications