கேரளாவுக்கு கடத்தப்பட்ட 100 தங்கக் கட்டிகள்
கோவை:
கேரளாவிற்குக் கடத்த முயன்ற ரூ. 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 தங்கக் கட்டிகளைப் போலீசார் கைப்பற்றினர்.
கோவையிலிருந்து பாலக்காடு ரோடு வழியாக ஒரு கார் வேகமாகச் சென்றது. இந்தக் காரைச் சந்தேகித்த போலீசார் குனியத்தூர் என்ற இடத்தில்தடுத்து நிறுத்தினர். காரில் பயணம் செய்த மூன்று பேரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசாரின் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து காரைச்சோதனையிட்டனர். அப்போது காரின் சீட்டிற்கு அடியில் இருந்த ரகசிய அறையில் தங்கக் கட்டிகள் இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
நூறு தங்கக் கட்டிகள் ஒவ்வொன்றும் 116 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 55 லட்சமாகும். இந்த தங்கக்கட்டிகள் கடத்தல் தங்கமா என்பது பற்றி ஆராய இதனை சுங்க வரித் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
காரில் பயணம் செய்த மலப்புரம் மாவட்டம், வெள்ளியூரைச் சேர்ந்த நெளஷத் (21), சமீல் (21), ஆகியோர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications