ராஜ்குமார்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி .. மூப்பனார்
கோவை:
தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் எடுத்த முடிவால் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்காக உச்ச நீதிமன்றத்திற்குநன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என மூப்பனார் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர்.பால சுப்ரமணியம் மணி விழாவில் கலந்து கொள்ளகோவை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராஜ்குமாரை விடுதலை செய்யப்பட்டதில் உச்சநீதிமன்றம் எடுத்த உறுதியான முடிவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ராஜ்குமார் மீட்புபிரச்னையில் அரசிடம் குறைகள், குற்றங்கள் உள்ளது. இது போன்று இனியும் நடக்காமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்.
உச்சநீதிமன்றம் தடாக் கைதிகளை விடுவித்திருந்தால் விளைவுகள் மோசமானதாக மாற வாய்ப்பு உருவாகியிருக்கும். ஆனால், இவ்விஷயத்தில் உச்சநீதிமன்றம் சரியான முடிவை மேற் கொண்டது பாராட்டுக்குரியது. நமது உடலுக்குள் இருக்கும் வியாதியையே கண்டு பிடித்து விடுகிறோம். வீரப்பனைக்கண்டு பிடிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது என்பது தெரியவில்லை.
இனிமேல் வீரப்பன் பிரச்னையைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதில் எவ்வித பயனும் இல்லை. ராஜ்குமார் கடத்தல்குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோருவது சாதாரணமானது அல்ல. ஆழமாக சிந்தனை செய்து மற்றவர்களுடன் கலந்துஆலோசனை செய்த பின்பு தான் இது பற்றி முடிவு எடுக்க முடியும்.
ராஜ்குமார் மீட்கப்பட்டு அவர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் இதற்காக அரசைக் குறை கூற முடியாது. எதற்கு ரிஸ்க் என அரசுஇருந்திருக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள குளறுபடிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளோம். சைதைத் தொகுதியில் 32ஆயிரம் போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனைச் சோதனை செய்தாலே உண்மை நிலவரம் தெரிய வரும். அதில் உள்ள மோசடியும் தெரியும்.இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து பதில் தருவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அணியா, நான்காவது அணியா என்பது பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். வெற்றி பெரும் அணியில் நாங்கள் இருக்கிறோம்இவ்வாறு மூப்பனார் பதிலளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications