என்னை சுட்டுவிடச் சொன்னேன்- ராஜ்குமார் அதிர்ச்சிப் பேட்டி
பெங்களூர்:
துணை இயக்குனர் நாகப்பா காட்டிலிருந்து தப்பியதால் விவகாரம் சிக்கலானது. வீரப்பன் கடும் கோபம் கொண்டான். நாகப்பாதப்பியவுடன் என்னுடன் கடத்தப்பட்ட நாகேஷ், கோவிந்தராஜூ ஆகியோரின் கைகளை வீரப்பனின் கூட்டாளிகள் கட்டினர்.அப்போது நான் என்னை சுட்டுவிடு வீரப்பா என்றேன். என்னைக் கொன்றுவிடு. ஆனால், அந்த 2 பேரையும் ஒன்றும் செய்யாதேஎனக் கேட்டுக் கொண்டேன் என்று நடிகர் ராஜ்குமார் கூறினார்.
பெங்களூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இதன் பின்னர் தான் வீரப்பன் இருவரின் கைக் கட்டுகளையும் நீக்கச் சொன்னான். அந்த இடத்தில் வீரப்பன் நல்ல மனதோடுநடந்து கொண்டான்.
வீரப்பன் நல்லவன் தான்:
வீரப்பன் நல்லவன் தான். அவன் மனிதாபிமானம் உள்ளவனாகத் தான் தெரிகிறான். அவனைப் பிடிப்பதா இல்லையா என்பதைஇரு மாநில அரசுகள் தான் முடிவு செய்யவேண்டும்.
காட்டிலிருந்து வெளியே வந்தது என்னமோ புதிய உலகிற்குள் நுழைந்தது மாதிரி இருக்கிறது. ஈரோட்டுக்கு அருகே காட்டிலிருந்துவெளியே வந்தவுடனேயே சாலைகளைப் பார்த்தேன், அதில் வாகனங்களும், மனிதர்களும் நடமாடுவதைப் பார்த்தவுடன்சிலிர்த்துப் போனேன். அந்த அளவுக்கு காட்டில் தனிப்பட்டுப் போயிருந்தேன்.
என்னை அழைத்துச் செல்ல கார் வந்தபோது அந்த காரின் சத்தம் கூட எனக்கு புதிதாகத் தோன்றியது.
காட்டில் எனது ஒரே உறவினர் வீரப்பன் தான். என்னை அவன் நன்றாகவே கவனித்துக் கொண்டான். அவன் அதிகம்பேசுவதில்லை. நல்லவன் தான்.
சூரியன் அஸ்தமிததால்....
சூரியன் அஸ்தமிக்கும் போதெல்லாம் வெறுத்துப் போனேன். எப்படி இரவைக் கழிக்கப் போகிறேன் என்று வேதனைப்பட்டேன்.என் குடும்பத்தினரையும், ரசிகர்களையும் சந்திக்க ஆசைப்பட்டேன்.
இப்போது கூட காட்டில் இருப்பது மாதிரியே தான் இருக்கிறது.
நாகப்பா தப்பியது குறித்து தெரிந்தவுடன் வீரப்பன் கும்பலுக்கும், மாறன் கும்பலுக்கும் கடும் கோபம் வந்தது. ஏதோ விபரீதம்நடக்கப் போவதாகத் தான் நினைத்தேன். அவர்கள் கைகளைக் கட்ட ஆரம்பித்தவுடனேயே, என்னை சுட்டுவிடச் சொன்ன்ே. நான்வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்துவிட்டேன். எனக்கு உயிர் பெரிதல்ல என்றேன். அந்தக் கும்பல் கைகளை கட்டிக்கொண்டிருந்தபோதே வீரப்பன் வந்து தலையிட்டு எங்களை விடுவித்தான். எங்களை ஒரே இடத்தில் தங்கியிருக்கவும்அனுமதித்தான்.
நெடுமாறன் பேச்சு நடத்த ஆரம்பித்த பின்னர் தான் நம்பிக்கை அதிகரித்தது. ஆனால், நான் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும்களைத்துப் போயிருந்தேன். எனது மருமகன் கோவிந்தராஜூவின் உடல் நிலை பாதிக்கப்பட்டவுடன் அவரை எப்படியாவதுவிடுவிக்குமாறு நெடுமாறனிடம் கேட்டுக் கொண்டேன். அவர் முயற்சிக்கு பலனும் கிடைத்தது. கோவிந்தராஜூவை வீரப்பன்விடுவித்தான்.
இதன் பின்னர் நான் இன்னும் எத்தனை நாள் காட்டில் இருக்க வேண்டும் என்று நெடுமாறனிடம் கேட்டேன். ஒரு மாதமாவதுஇருக்க வேண்டியிருக்கும் என அவர் பதிலளித்தார்.
டாக்டர் உருவத்தில் வந்த தெய்வம்:
கடவுளான சக்தி தேவி தான் டாக்டர் பானு உருவத்தில் காட்டுக்குள் வந்ததாக நினைக்கிறேன். அவர் என்னிடம் முதலில்பேசியபோதே, எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உடல் நிலை சரியில்லாதது போல மட்டும் நடியுங்கள் என்றார். பின்னர்வீரப்பனிடம் திரும்பி, இவரது ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. இனியும் காட்டில் வைத்திருந்தால் ஆபத்து என்றார்.
அதற்குப் பிறகு நடந்தது தான் வரலாறு. இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன் என்றார் ராஜ்குமார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications