வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை
சென்னை:
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து விவசாய அதிகாரி வீட்டில் ரூ 20ஆயிரம் கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி கடப்பா ரோட்டில் வசித்து வருபவர் சுப்ரமணியம். இவர் பள்ளிப்பட்டுவிவசாய அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரதுமனைவி ரமாதேவி.
சுப்ரமணியம் வீட்டிற்குள், சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் 5 பேர் கொண்டகொள்ளையர்கள் நுழைந்தனர். தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றுஅவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அப்போது அவர்கள் சுப்ரமணியம்பற்றியும், அவரது குடும்பம், சொத்து, வருவாய் குறித்தும் கம்ப்யூட்டரில் பதிவுசெய்யப்பட்ட விவரப் பட்டியல்கள் வைத்திருந்தனர்.
அந்த பட்டியல்களை சுப்ரமணியத்திடம் காட்டி விளக்கம் கேட்டனர். வீட்டில்சோதனையிடப் போவதாக கூறிவிட்டு எல்லா அறைக்குள்ளும் புகுந்து எதையோதேடினர்.
உண்மையில் அதிகாரிகள் என்று நம்பிய சுப்ரமணியம் குடும்பத்தினர் பீரோ, பெட்டிஎன்று எல்லாவற்றையும் திறந்து காட்டினர். கிட்டத்தட்ட அவரது வீட்டில் 100 சவரன்தங்க நகைகள் இருந்தன. 1 லட்சம் பணம் இருந்தது.
அவற்றை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் கேட்டனர். பின்னர் அவற்றைகுறிப்பெடுத்துக் கொள்வது போல் நடித்தனர். பின்னர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்அலுவலகம் அருகில் தங்களது அலுவலகம் இருப்பதாகக் கூறி, அங்கே வந்துசந்திக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பி விட்டனர்.
அவர்கள் சென்ற பின்னர் அந்த நகைகளை எல்லாம் எடுத்து மீண்டும் பீரோவில்வைக்க முயன்ற போது அதில் இரண்டரை சவரன் நகையும், 20 ஆயிரம் ரூபாய்ரொக்கமும் குறைந்திருந்தது.
உடனே சுப்ரமணியம் நேராக திருவள்ளூர் வந்தார். அங்கே வருமானவரித்துறைஅலுவலகத்தை தேடி அலைந்து திரிந்துவிட்டு, ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர்திருத்தணி போலீசில் புகார் செய்தார்.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications