டீ உற்பத்தியை நிறுத்த இந்தியா முடிவு
குவஹாத்தி:
தேயிலை உற்பத்தியை அடுத்த மாதம் முதல் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
டீத்தூள் விலையில் ஏற்பட்டு கடுமையான விலை வீழ்ச்சி, பருவநிலை காரணமாக தேயிலையின் தரம் குறைந்துபோனதுகாரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியைத் தொடர்ந்தால் தேயிலையின் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலைஉருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி செய்யும் சுமார் 2,000 விவசாயிகள், டிசம்பர் 12ம்தேதி முதல் உற்பத்தியை நிறுத்திவிட வேண்டும் என தேயிலைப் பயிரிடுவோர் சங்கம் அறிவுருத்தியுள்ளது. ஏற்கனவே விற்காமல்உள்ள தேயிலையை விற்ற பின்னர் தான் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கலாம் எனக் கூறியுள்ளது.
உற்பத்தியை நிறுத்தினால் தான் டீயின் விலையை அதிகரிக்க முடியும் என இச் சங்கம் நினைக்கிறது. விலை வீழ்ச்சியால் தேயிலைதோட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு சிறிய, நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 806 மில்லியன் கிலோகிராம் டீ உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 55 சதவீதம் அஸ்ஸாமில் தான்உற்பத்தியாகிறது. தேயிலைத் தொழிலை நம்பி சுமார் 1 கோடித் தொழிலாளர்கள் உள்ளனர்.
விலை வீழ்ச்சியால் பல பெரிய தேயிலை உற்பத்தியாளர்களே தோட்டங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications