ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் அசார்
ஹைதராபாத்:
கிரிக்கெட் சூதாட்டத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் சில பகுதிகள் உண்மையானவை என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் அசாருதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அசாருதீன், ஜடேஜா, மோங்கியா. மனோஜ் பிரபாகர், அஜய் ஷர்மா மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை செய்தது.
இவர்கள் 5 பேருக்கும் சர்வதேச, உள்ளூர் விளையாட்டுகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இவர்களை விசாரிக்க கிரிக்கெட் வாரியம் முன்னாள்சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் மாதவனை நியமித்தது.
இவர் அசாருதீன் தவிர மற்ற நால்வரிடமும் விசாரணை நடத்தி முடித்தார். அசாருதீன் பாதுகாப்பை காரணம் கூறி விசாரணையை தட்டிக் கழித்து வந்தார்.
பாதுகாப்பு காரணமாக ஹைதராபாத்தை விட்டு வரமுடியாது எனவும் தன்னை ஹைதராபாத்தில் வந்து விசாரிக்கவேண்டும் எனவும் மாதவனுக்குவேண்டுகோள் விடுத்தார்.
அதையடுத்து மாதவன் ஹைதராபாத் வந்து அசாருதீனிடம் 6 மணி நேரம் விசாராணை நடத்தினார். அந்த விசாரணையின் போது அசாருதீன் தன் மீதிசுமத்தப்பட்டுள்ள கிரிக்கெட் சூதாட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனவும், தன் வளர்ச்சியை விரும்பாத சிலர்செய்த சதி இது எனவும் கூறினார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் தன்னை முக்கிய குற்றவாளியாக சேர்த்திருப்பதையும் அசார் ஆட்சேபணை செய்தார்.
ஆனாலும் சி.பி.ஐ. குற்றுப்பத்திரிக்கையின் சில பகுதிகள் சரியானவை என ஒப்புக் கொண்டார் என விசாரணை குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications