மாருதியின் பங்குகளை விற்க முடிவு
டெல்லி:
மாருதி உத்யோக் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியாக, இந்நிறுவனத்தின் கூட்டு அமைப்பான ஜப்பான் நாட்டின் சுஜூகிமோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சரவை அனுமதி தந்துள்ளது.
அரசுத்துறைகளை தனியார் மயப்படுத்துவது தொடர்பான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதற்குப் பிரதமர் வாஜ்பாய் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அருண் ஷோரி கூறியதாவது:
இந்தியன் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் பரோடா தொழிற்சாலையை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்தநடவடிக்கை பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் பங்குகள் தனியார்படுத்தும் நடவடிக்கைக்கு முன்பாகவே அமைய வேண்டும் என்றுதீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதிப்பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் பாரதீப் பாஸ்பேட் லிமிடெட் நிறுவனமும் தனியார் மயமாக்கப்படுகிறது என்றார் அருண் ஜோஷி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications