சமையல் கேஸ் விலை குறைப்பு
டெல்லி:
சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல மண்ணெண்ணையின் விலையும் லிட்டருக்கு 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்ததால்பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 2.39 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.75 ம், மண்ணெண்ணை விலை லிட்டருக்கு 2.81 ம்உயர்ந்தது. சமையல் கேஸ் விலை ரூ 36.20 ஆக அதிகரித்தது.
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் என்றும், எனவே விலை உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும்என்றும் எதிர்க்கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்தின.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகி விடப்போவதாகவும் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இறுதியில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த விலைக்குறைப்பு எப்போது அமலுக்கு வரும் என்பதைமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம்நாயக் செவ்வாய்க்கிழமை அறிவிப்பார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைப்பதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications