தோள்பட்டை வலி: கும்ளேவுக்கு தீவிர மருத்துவ சோதனை

Subscribe to Oneindia Tamil

கோவை:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வின்றி அதிக அளவில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கின்றனர். இதனால் தான் அவர்களுக்குத்தோள்பட்டையில் பிரச்னை ஏற்படுகிறது என கும்ளேவைப் பரிசோதனை செய்ய வந்துள்ள வெளிநாட்டு எலும்பு மருத்துவநிபுணர் பெர்கஷன் கூறியுள்ளார்.

அனில் கும்ளேவிற்கு ஏற்பட்டுள்ள தோள்பட்டை வலிப் பிரச்னையை ஆய்வு செய்து சிகிச்சை அளிக்கதென்னாப்பிரிக்காவிலிருந்து எலும்பு சிகிச்சை நபுணர் பெர்கஷன் வந்துள்ளார். கும்ளேவிற்கு மருத்துவ பரிசோதனை செய்தபின்னர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் வருகை தந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:

ஸ்ரீநாத்திற்கு ஏற்பட்ட தோள் வலிப் பிரச்னையைப் போன்று தான் அனில் கும்ளேவுக்கும் ஏற்பட்டுள்ளது. அனில் கும்ளேவைப்பரிசோதனை செய்தன்ே. அவருக்குத் தகுந்த சிகிச்சை அளித்தால், அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிரச்னை ஏற்படாது.

பொதுவாக இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகின்றனர். இதனால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தோள் வலிப் பிரச்னை ஏற்படுகிறது.

ஓய்வின்றி அதிகமாக ஒரு நாள் போட்டிகளில் இந்த வீரர்கள் விளையாடுவதால் தான் இப் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இந்தியவீரர்களுக்கு இப்பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

கும்ளேவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக அவரது குடும்ப டாக்டருக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். அவரதுஉடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். கும்ளே பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஓரேஇன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் கேசட் என்னிடம் உள்ளது. இந்த கேசட்டை ஆராய்ந்துவருகிறேன்.

இதன் பின்னர் அவருக்கு ஏற்ற பயிற்சி வழங்கப்படும். கிரிக்கெட், வட்டு எறிதல், கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில்பங்கேற்கும் வீரர்கள் தங்களது உடல் நலத்தை எப்படிப் பாதுகாப்பது, முறையான பயிற்சி பெறுவது எப்படி என்பது பற்றி சிடிதயாராகி வருகிறது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+