தமிழகத்தில் மேலும் ஒரு ஜாதிக் கட்சி !
பழனி:
தமிழகத்தில் கொங்கு நாடு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 23 ம் தேதிஈரோட்டில் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் ஆர்.தேவராஜன் பேசியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு எந்த அரசும், மதிப்புக் கொடுப்பதில்லை. எந்தக் கூட்டத்திற்கும், சாதிஅமைப்புக்களுக்கு அரசு எந்தவித அழைப்பும் கொடுப்பதில்லை. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் சாதி என்ற போர்வை உள்ளது.
தற்போது கொங்குநாட்டை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் 1.3 கோடி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் உள்ளனர். இவர்கள் 69 சட்டப்பேரவைதொகுதியிலும், 12 நாடாளுமன்றத் தொகுதியிலும், வெற்றியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர்.
ஆகவே கொங்கு நாட்டை மையமாக வைத்து கொங்கு நாடு மக்கள் கட்சி என்னும் பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கோவை செழியன்தொடங்கிய தமிழ் தேசிய கட்சிக்கும், கொங்கு நாடு கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, 3 வது அணி என எந்தக் கூட்டணி அதிக இடங்களைத் தருகிறதோ அந்தக் கூட்டணியுடன் கொங்கு நாடுமக்கள் கட்சி கூட்டணி அமைக்கும்.
கொங்கு நாடு மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 23 ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் ஈரோட்டில் நடைபெறும்.
தமிழகத்தில் சாதிக் கட்சிகள் அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் சாதிக்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது பல்வேறுபிரச்சனைகள் களையப்படும். அரசியல்வாதிகளைக் கொண்ட கூட்டணியைக் காட்டிலும் சாதிக் கட்சிகளால் நல்ல ஆட்சியைத் தர முடியும் என்றார்தேவராஜன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications