வீரப்பன் ஒரு சமூக விரோதி: பா.ஜ.க.
திருப்பூர்:
சமூக விரோதி வீரப்பனை இனியும் விட்டு வைக்கக் கூடாது என பா.ஜ.கட்சியின் மாநிலத் தலைவர் கிருபாநிதி கூறினார்.
பா.ஜ.கவின் தாமரை ரத யாத்திரைக்குத் தலைமை ஏற்றுள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் கிருபாநிதிதிருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்க நிெடுமாறன் சென்றது ஏன், அதில் உள்ள உள்நோக்கம் என்ன என்பதை நாங்கள் நன்குஅறிவோம். நெடுமாறனுடன் எங்களுக்கு எவ்விதக் கருத்து ஒற்றுமையும் இல்லை.
வீரப்பன் விஷயத்தில் பா.ஜ.கவின் நிலை முதல்வருக்கு நன்றாகத் தெரியும். வீரப்பனைப் பிடிக்க முதல்வர் கட்டாயம் நடவடிக்கைஎடுப்பார் என நினைக்கிறோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நேரில் சென்று வலியுறுத்துவேன்.
தடா கைதிகளை விடுவிப்பது நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது. நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும். வீரப்பன், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்பதே பா.ஜ.கவின் கொள்கை.
வாஜ்பாய் அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்க தாமரை ரத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். இதில் குமரிமாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், ராமேஸ்வரத்திலிருந்து எச். ராஜாவும், தேன்கனிக்கோட்டையிலிருந்து இல. கணேசனும், நீலகிரி எருமாடு பகுதியிலிருந்து நானும் இந்த ரத யாத்திரையைத் துவக்கியுள்ளோம்.
திருச்சியில் டிசம்பர் முதல் தேதியில் இந்த ரதயாத்திரை நிறைவு பெறும். அங்கு பொதுக் கூட்டம் நடக்கும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதிக தொகுதியில் நிற்போம். தற்போது பா.ஜ.கவில்12 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 75 சதவீதம் பேர் இளைஞர்கள்.
சாதிக் கட்சிகளை எப்போதும் பா.ஜ.க. ஏற்காது. அவற்றை வரவேற்கவும் மாட்டோம். வரும் சட்டசபைத் தேர்லில் இந்தக் கட்சிகள்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தாலும், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications