10 சதவீத குற்றவாளிகளே தண்டிக்கப்படுகிறார்கள்
கோவை:
இந்தியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளில் இதுவரை 10 சதவீதத்தினருக்கு மட்டுமே தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது என்று சிபிஐ முன்னாள் இயக்குநரும், தற்போதைய தேசிய மனித உரிமை கழகஇயக்குநருமான கார்த்திக்கேயன் கோவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கோவையில் நடந்த 3-வது அர்த்தநாரீஸ்வரா நினைவுப் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர்பேசுகையில், இந்தியாவில் பெருகி வரும் குற்றங்களில் பெரும்பாலானவை அடையாளம் கண்டு பிடிக்கப்படுவதேஇல்லை. நடந்த குற்றங்களில் 70 சதவீத குற்றவாளிகள் மீது மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 30 சதவீதம் மட்டுமே விசாரணைக்கு வருகின்றன. அவற்றில் 10 சதவீதவழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பெரும்பாலான வழக்குகள் தீர்ப்புக்கூறப்படாமலேயே உள்ளன. இதனால், நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரித்து வருவது வாடிக்கையாகி விட்டது.
இதுதவிர சம்பந்தப்பட்ட வழக்குத் தொடர்பாக சாட்சி சொல்ல வருபவர்கள் மிகவும் மரியாதையாகநடத்தப்பட்டால் தான் தீர்ப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
சட்ட அமைப்பு முறையில் மாற்றம், வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பான பயிற்சி மற்றும்நீதித்துறையில் ஆரோக்கியமான விவாதம் நடக்க வலியுறுத்துதல் போன்றவை செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் அதிகரித்து வரும் குடிசைப்பகுதிகள், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவையேகுற்றங்கள் பெருகுவதற்கு முக்கியக் காரணமாகிறது.
1998-ம் வருட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 11 வழக்குகள் பதிவாகின்றன. கடந்த சிலமாதங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. போதைப் பொருட்கள் கடத்தல்,இன்டர் நெட் குற்றங்கள் மற்றும் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது.
தீவிரவாதிகள் நவீன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குற்றங்கள் புரிந்து வருகிறார்கள். மேலும் குற்றவாளிகளும்,தீவிரவாதிகளும் அரசியல் தலைவர்களுடன் மிக நெருக்கமாகி விடுகிறார்கள். இதை அரசியல் தலைவர்கள் ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது என்றார் கார்த்திக்கேயன்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
