இந்திய கிரிக்கெட் அணி வரும் .. பாக். நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

துபாய்:

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் என்று தான் இன்னும்நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜெனரல் தாகீர்ஜியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுகன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஷார்ஜா வந்த ஜியா,பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்தைச் சேர்ந்த ராஜ் சிங் துங்கார்பூர் சமீபத்தில் பாகிஸ்தான் வந்திருந்தார்.இந்திய அணியை, பாகிஸ்தானுக்கு அழைத்து வர மிகவும் ஆவலுடன் இருப்பதாகஅப்போது தெரிவித்தார்.

இந்திய அணியின் பயணத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டதால், தனது பயணத்தைபாதியில் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார் துங்கார்பூர். இந்திய அரசைசமாதானப்படுத்தும் நோக்கத்தில்தான் அவர் திரும்பிச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானில் இந்திய அணிக்குச் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் பிறஏற்பாடுகள் குறித்து துங்கார்பூர், இந்திய தூதர் விஜய் நம்பியாருடன் ஆலோசனைநடத்தினார். அவரது திருப்தி காரணமாகவே, இந்திய அணி எப்படியும்பாகிஸ்தானுக்கு வரும் என்று நம்பிக்கை உள்ளது.

இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்து விட்டதால், வாக்குறுதியை மீறியதறகாகசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்என்று பாகிஸ்தான் கோரப் போவதில்லை. அப்படி ஒரு எண்ணமே எங்களுக்குஇல்லை.

இந்தியாவை கிரிக்கெட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எப்போதுமேவிரும்பாது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு நாடு, இன்னொரு நாட்டில்விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+