நீலகிரி மலைகளில் அதிரடிப்படை குவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கர்நாடக எல்லைப் பகுதியான நீலகிரி மலைப் பகுதிகளில் வீரப்பன் வரலாம் என்றஎதிர்பார்ப்பில் இப்பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வீரப்பன் காட்டில் மழை பெய்தால் தேடுதல் வேட்டைக்கு அது இடையூறாக அமையும்என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட பந்திப்பூர் பகுதி வீரப்பன்அடிக்கடி வருகை தரும் இடமாகத் திகழ்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புபந்திப்பூர் சரணலயத்திற்கு வந்த பயணிகளை வீரப்பன் கடத்தினான்.

மேலும், மசினகுடி என்ற இடத்தில் வீரப்பனின் ஆட்கள் சமையலுக்குத் தேவையானபொருட்களை வாங்கிச் செல்வதாகத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, நீலகிரிமலைப் பகுதியில் முக்கிய இடங்களான மசினகுடி, சோலூர் மட்டம், மயார்,கொடநாடு, தெப்பக்காடு ஆகிய இடங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுவருகின்றனர்.

தெப்பக்காடு, சிறியார் ஆகிய இடங்களில் வீரப்பன் நடமாட்டம் அதிகமாகஇருந்ததுண்டு. இதையடுத்து இப்பகுதியையும் தீவிரமாகப் போலீசார் மற்றும்வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பண்ணாரி, தெங்குமரஹாடா, திம்பம், புளிஞ்சூர், கடம்பூர், தலைமலைப் பகுதிகளில்அதிரடிப்படையினர் காட்டுக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையைத் துவக்கியுள்ளனர்.இங்கு தேடுதல் வேட்டைக்கு இடையூறாகவும், வீரப்பனுக்குச் சாதகமாகவும் வானிலைநிலவுகிறது. இதனால் தேடுதல் வேட்டையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்நிலை உருவாகியுள்ளது.

வீரப்பன் வாழும் காட்டில் மழை பெய்யும்போது அது வீரப்பனுக்கே இதுவரைசாதகமாக அமைந்துள்ளது. பலமுறை அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில்ஈடுபட்டபோது மழை பெய்ததால் தேடுதல் வேட்டையில் முன்னேற்றமின்றி நின்றுபோனது.

இதே போன்ற சூழ்நிலை இப்போதும் உருவாகியுள்ளது. இதனை மீறிஅதிரடிப்படையினர் இம்முறை பின்வாங்காமல் முன்னேறுவர் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+