மேட்ச் பிக்சிங்கில் எனக்குத் தொடர்பில்லை: அசார்
டெல்லி:
மேட்ச் பிக்சிங் விஷயத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதேபோல் மும்பை தாதாக்களுடனும் தொடர்பு இல்லை என்று இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மேட்ச் பிக்ஸிங் சூதாட்டத்தில் எனக்குத் தொடர்புள்ளது என்று கூறுவது முற்றிலும் பொய்யான தகவலாகும். எனக்கு மேட்ச் பிக்சிங்கிலும்தொடர்பில்லை. அதேபோல் எனக்கு எந்தச் சூதாட்டக் காரர்களுடனும் தொடர்பில்லை.
ரவுடிகளுடனும் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. சில ரவுடிகளுடன் நான் புகைப்படங்களில் காட்சியளிப்பதாகக் கூறுகிறார்கள். அது எனக்கேதெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்கலாம். என்னை யார் யார் எப்போதெல்லாம் புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதையெல்லாம்என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அனைத்து விஷயங்கள் குறித்தும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வருமானவரித் துறையினர் எனக்கு டெல்லிக்கு அருகே பல இடங்களில் பண்ணை வீடுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். எனக்கு அந்தப் பண்ணை வீடுகள்எங்கேயிருக்கிறது என்று தெரிய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications