சினிமா பாணியில் ஒரு நகைக் கொள்ளை
சென்னை:
சென்னை ஹோட்டலில் தங்கியிருந்த கேரள தங்க வியாபாரியிடம், சினிமா பாணியில்,ஸ்டைலாக வந்து கத்தியால் குத்தி அவரிடம் இருந்த ஒரு கிலோ தங்க நகைகளைகொள்ளையடித்துச் சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் அனில்குமார் (28), பிரமோத் (30).இருவரும் தங்க நகை வியாபாரிகள்.
கேரள டிசைன்களில் ஏராளமான நகைகளை செய்து எடுத்து வந்து சென்னை நகைவியாபாரிகளிடம் விற்பது வழக்கம்.
அதன்படி ஒரு கிலோ தங்க நகைகளுடன் சென்னை வந்தனர்.
பாரிமுனை தேவராஜ் முதலி தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர். பகல் 12மணியளவில் பிரமோத் வெளியே சென்று விட்டார். அறையில் அனில்குமார் மட்டும்தனியாக இருந்தார்.
அப்போது 3 பேர் கும்பல் அறைக்குள் நுழைந்தது.
மூவரும் சிகரெட் புகைத்துக் கொண்டே உள்ளே நுழைந்ததோடு, புகையை படுத்துக்கொண்டிருந்த அனில்குமார் முகத்தில் ஒன்று போல் ஊதினர். இதனால் திணறியஅனில்குமார் அவசர அவசரமாக எழுந்து நகைகளை எடுத்து மறைத்து வைக்கமுயன்றார்.
உடனே அக்கும்பல் கத்தியால் அனில்குமார் கையில் வெட்டினர். காயமடைந்தஅனில்குமார் அப்படியே படுக்கையில் விழுந்தார்.
பின்னர் நகைப் பைகளை எடுத்துக் கொண்டு மூவரும் தப்பிச் சென்று விட்டனர்.
வெளியே சென்றிருந்த பிரமோத் அறைக்கு திரும்பியபோது அனில்குமார் ரத்தகாயத்துடன் மயங்கி கிடந்தார். உடனடியாக அனில் குமாரை அரசுபொதுமருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் பூக்கடை போலீசில் புகார் செய்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications