மாறன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை நன்கு தேறி வருகிறது.
அவர் தினமும் 4 மணி நேரம் எழுந்து அமர்கிறார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திறமை வாய்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
லண்டன் மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து 24 மணிநேரமும் முரசொலி மாறனின் உடல்நிலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தற்போது அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார். வழக்கமான உணவு வகைகளைச் சாப்பிடத் தொடங்கி விட்டார். குடும்பத்தினரிடம் சரியாகப் பேசிவருகிறார்.
மாறனின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீவிர சிகிச்சை பிரிவில் முரசொலி மாறன் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. தினமும் 4 மணி நேரம் உட்கார வைக்கப்படுகிறார்.நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் ஒரே சீராக உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள் என்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications