கடும் மழை: சரியான உடைகள் இல்லாமல் அதிரடிப்படையினர் அவதி
கோவை:
வீரப்பன் காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதிரடிப்படையினரின் வேட்டையில் பின்னடைவுஏற்பட்டுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பிற்குப் பிறகு உடனடியாக அதிரடிப் படையினர் வீரப்பனைப் பிடிக்க களம்இறங்கினர். ஆனால், வானிலை மற்றும் காலச் சூழ்நலை எப்போதுமே வீரப்பனுக்குச் சாதகமாகவே அமைந்துவிடுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வீரப்பனுக்குக் கை கொடுத்து வருவது இந்த இயற்கை தான். கடந்த 108நாட்களாக அமைதியாக இருந்த வானம், இப்போது மழை தூவி வருகிறது.
காடு முழுவதும் கடும் பனிமூட்டமும் நிலவுகிறது. இந்தக் காட்டுப் பகுதியில் பகல் கூட இரவாகத் தான்காட்சியளிக்கிறது. பகலிலும் வாகனங்கள் விளக்குகளைப் போட்டுக் கொண்டு தான் சென்று வருகின்றன.
இதனால் வீரப்பனைத் தேடிச் சென்ற அதிரடிப்படையினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், இப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் அதிரடிப்படையினர் குளிரில் வாடிக் கொண்டுள்ளனர்.
மேலும் அதிரடிப்படையினருக்கு போதிய அளவு அதிரடிப்படைக்குரிய உடைகள் கூடக் கொடுக்கப்படவில்லை.இதனால் காக்கிச் சட்டையுடன் தான் பணியாற்றி வருகின்றனர். இந்த உடை, குளிருக்கோ, பூச்சித் தாக்குதலிலோஇருந்து பாதுகாக்கும் திறன் கொண்டதில்லை.
எனவே, ஆங்காங்கே முகாமில் தங்கியுள்ள போலீசாரின் அவதி நிலையைக் கருத்தில் கொண்டு காட்டில் இருந்துவெளியேற உத்தரவு வருமா என்ற நிலையில் தான் அதிரடிப்படையினர் உள்ளனர்.
மழையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வீரப்பன் கேரளக் காட்டுப் பகுதிக்குத் தப்பிச் சென்றிருக்கலாம்என அதிரடிப்படையினர் கருதுகின்றனர். எனவே, இப்போதைய சூழ்நிலையில் அதிரடிப்படையினர் பணியில்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications