கிரிக்கெட் ஊழல்: அறிக்கையை சமர்பித்தார் மாதவன்
சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர்களின் மேட்ச் பிக்சிங் குற்றங்கள் குறித்து விசாரித்து வந்த முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர்மாதவன் தனது விசாரணை அறிக்கையை சனிக்கிழமை சமர்பித்தார்.
சி.பி.ஐயால் குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மாதவனைக்கொண்டு மீண்டும் விசாரித்தது.
விசாரணை விறுவிறு என நடத்தி முடித்த மாதவன் தனது விசாரணை விவரங்களை கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத் தலைவர் முத்தையாவிடம் சமர்பித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீன். அஜய் ஜடேஜா,அஜய் சர்மா, மனோஜ்பிரபாகர், நயான் மோங்கியா ஆகியோர் கிரிக்கெட் சூதாடட்த்தில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியிருந்தது.
இது குறித்து விசாரணை செய்ய முன்னாள் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் மாதவனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் நியமித்தது. இவர் இவர்களை விசாரித்த பின் 340 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் முத்தையாவிடம் சனிக்கிழமையன்று சமர்பித்தார்.
அறிக்கையை சமர்பித்த பின் நிருபர்களிடம் பேசிய மாதவன் கூறியதாவது:
என்னுடைய பணயில் 90 சதவிகிதம் முடிந்து விட்டது. மீதமுள்ள 10 சதவிகிதம் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகுறித்தி சி.பி.ஐ. குறை கூறியிருந்தததுதான். அது பற்றிய விவரம் இரண்டு நாட்களில் கிரிக்கெட் கிரிக்கெட்வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
என் பணி நான் செய்த விசாரணையின் அடிப்படையிலான அறிக்கையை கொடுத்ததுடன் முடிந்து விட்டது.இப்பொழுதுதான் அறிக்கையை கொடுத்திருக்கிறேன். அதை முத்தையா படித்து முடிவெடுப்பார். அதற்கு முன்நான் எதையும் முன்கூட்டி சொல்ல விரும்பவில்லை என்றார்.
கிரிக்கெட் வாரியத் தலைவர் முத்தையா கூறுகையில், கிரிக்கெட் வாரியம் குற்ற்ம் புரிந்தவர்கள் மீது வாழ் நாள்முழுதும் விளையாடக் கூடாது என்ற தடை போடுவது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுப்பது என்பதில் உறுதியாகஇருக்கிறது.
மாதவனின் அறிக்கை குறித்து நவம்பர் மாதம் 28-ம் தேதி கல்கத்தாவில் கூடவிருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகூட்டத்தில் விவாதிகக்கப்படும். அதில் எடுக்கப்பட்டு முடிவுகள் 29-ம் தேதி கூடும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில்இறுதி முடிவுக்காக கொடுக்கப்படும்.
கிரிக்கெட் வாரியம் குறித்து சி.பி.ஐ. கூறிய குற்றச்சாட்டு குறிதது மாதவன் விசாரித்த பின் கொடுக்கும் அறிக்கைஅனைவருக்கும் தெரிவிக்கப்படும்.
சி.பி.ஐயால் குற்றம் சாட்டப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கும், சிறப்புபொதுக்குழுவின் முன்னும் ஆஜாராகும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications