பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையா? நோ சான்ஸ்- இந்தியா அறிவிப்பு
டெல்லி:
ஜம்மு காஷ்மீரில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நேரத்தில், பாகிஸ்தானுடன், இந்தியாபேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சாத்தியமில்லாத காரியமாகும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காஷ்மீரில் ரம்ஜானையொட்டி நாங்கள் சண்டை நிறுத்தம் அறிவித்தோம். ஆனால், பாகிஸ்தான் ஆதரவுதீவிரவாதிகளின் வெறிச் செயல் நிற்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அப்பாவிப் பொதுமக்கள் பலர்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 5 பஸ் பயணிகள்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முழுமுதல் காரணம் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான். தீவிரவாதிகள் ஒரு பக்கம் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் போது, மறுபக்கம் பேச்சுவார்த்தை என்பது இயலாத காரியமாகும்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் காஷ்மீரில்வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது.
அதாவது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவ வேண்டும். அப்போது தான்பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்கும்.
கிளின்டனின் இந்திய வருகை:
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் இந்தியா வந்திருந்தார். அப்போது, நாட்டின்நிலைத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
கிளின்டனின் இந்திய வருகை வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். எந்தக் காரணம் கொண்டும் இந்தியா,அமெரிக்காவின் நட்பை இழக்கத் தயாராக இல்லை. அதே போல் அனைத்து விஷயங்களிலும் இரு நாடுகளும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபரின் இந்திய வருகை:
பிரதமர் வாஜ்பாய் ரஷ்யா சென்றதையொட்டி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வந்துள்ளார்.இதை சர்வதேச அளவில் இந்தியா, ரஷ்யாவுடன் தோழமை உணர்வுடன் செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.
இஸ்ரேல் -பாலஸ்தீன பிரச்சனை:
யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ராணுவவீரர்களுக்கிடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.
இதில் ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதையேஇந்தியா விரும்புகிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
ஐ.ஏ.என்.எஸ்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications