சச்சின் இரட்டை சதம் - வலுவான நிலையில் இந்தியா
நாக்பூர்:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 609 ரன்களைக் குவித்து வலுவான நிலையைஎட்டியது. சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் போட்டு, இந்திய அணியின் ரன் குவிப்புக்குத் தலைமை வகித்தார்.
சனிக்கிழமை துவங்கிய இந்த போட்டியின் 2-வது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. டிராவிடும், டெண்டுல்கரும்தங்களது அதிரடி ரன் குவிப்பைத் தொடர்ந்தனர்.
டிராவிட் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் அவுட் ஆகாமல் இருந்தடிராவிட் இப்போட்டியில், 162 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் செய்யப்பட்டார். இந்தப் போட்டியிலும் இரட்டை சதம் எடுப்பார்என்று எதிர்பார்க்கப்பட்ட டிராவிட், அவுட் ஆகிச் சென்று விடவே, அவருக்கு அடுத்து ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தடெண்டுல்கர் மீது கவனம் திரும்பியது.
டெண்டுல்கரும் தனது ஆவேச ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவர் இரட்டை சதம் எடுத்து விட்டட் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும்என்ற நிலை இருந்தது. அதன்படியே, டெண்டுல்கர் இரட்டை சதம் போட்டவுடனேயே இந்தியா தனது முதல் இன்னிங்ஸைடிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
டெண்டுல்கரும், டிராவிடும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 249 ரன்களைச் சேர்த்தனர். டிராவிட் அவுட் ஆனவுடன் அடுத்த 30நிமிடங்களுக்கு இந்தியா ரன் ஏதும் எடுக்கவில்லை. 1 மட்டுமே அந்த நேரத்தில் சேர்க்கப்பட்டது.
டிராவிட் போன பிறகு வந்த கேப்டன் கங்குலி 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேபோல, சுனில்ஜோஷியும்வந்தார், அடித்தார், சென்றார். விறுவிறுப்பாக ஆடிய ஜோஷி 27 ரன்களைச் சேர்த்தார்.
டெண்டுல்கர் இதுவரை 23 டெஸ்ட் சதங்கள் மட்டுமே வைத்திருந்தார். தற்போதைய சதத்தின் மூலம் 24-வது சதத்தைப்போட்டுள்ளார். இதுவரை அதிகபட்ச சதங்கள் போட்ட வீரர்களின் வரிசையில் தற்போது நான்காவது இடத்தில் டெண்டுல்கர்உள்ளார். இதற்கு முன்பு கவாஸ்கர் (34), பிராட்மன் (29), ஆலன் பார்டர் (27), சோபர்ஸ் (26) ஆகியோர் அதிகபட்ச சதங்கள்எடுத்துள்ளார்கள். மற்றொரு வீரரான கிரேக் சாப்பல் 24 சதங்கள் போட்டுள்ளார்.
ஏற்கனவே, 26 ஓருநாள் சதங்களை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள்போட்டிகளில்மொத்தம் 50 சதங்களைப் போட்டுள்ளார் டெண்டுல்கர்.
டெண்டுல்கரின் இரட்டை சதத்துடன் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பின்னர் ஜிம்பாப்வே தனது முதல்இன்னிங்ஸை தொடங்கியது. சிறிது நேரத்திலேயே கிரான்ட் ரெனி ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 15. அவரை அகர்கர் ரன்அவுட் செய்தார்.
தொடர்ந்து விட்டால் (34), கர்லிஸ்லி (4) ஆகியோர் ஆட்ட நேர முடிவு வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications