யாழ்ப்பாணத்தில் ராணுவத்தை வாபஸ் பெறுக .. புலிகள்
கொழும்பு:
இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பு, யாழ்ப்பாணம் தீபகற்பத்திலிருந்து ராணுவ வீரர்கள்முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தணிகாச்சலம்கூறியிருக்கிறார்.
சமீபத்தில், நார்வே அமைதித் தூதுக் குழு, நவம்பர் 1ம் தேதி பிரபாகரனை காட்டில் சென்று சந்தித்தபோது, அவருடன்இருந்தவர்களில் ஒருவர்தான் தணிகாச்சலம்.
பிரபாகரனின் 46-வது பிறந்த நாள், இறந்த புலிகளுக்கு அஞ்சலி ஆகியவை அடங்கிய மாவீரர் வாரத்தை விடுதலைப் புலிகள்கடைப்பிடித்து வருகின்றனர். திங்கள்கிழமை இது முடிவடைகிறது. திங்கள்கிழமை மாலை, விடுதலைப் புலிகளின் ரேடியோவில்,பிரபாகரன் உரை நிகழ்த்துவார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடலாம்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது பிறந்த நாளையொட்டி, புலிகள் வசம் இருந்த15 கைதிகளை விடுவிக்க பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், 2 நாள்விடுமுறையும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொழும்பு நகரிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தணிகாச்சலம்கூறியிருப்பதாவது:
ராணுவ ஆக்கிரமிப்பு முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து அகல வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலைஅங்கு உருவாக்கப்பட வேண்டும். ராணுவம் இல்லாத சூழ்நிலையில் மட்டுமே பேச்சுவார்த்தை புலிகள் சம்மதிக்க முடியும்.யாழ்ப்பாணம் மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும். மக்கள் மனதில் அமைதி என்றவார்த்தை பதிய வேண்டும்.
உண்மை, நியாயம் ஆகியவற்றை மையமாக வைத்து எந்த அமைப்பு சமரச முயற்சியில் ஈடுபட்டாலும் அதை நாங்கள்வரவேற்போம். நார்வே முயற்சியை நாங்கள் நம்பிக்கையுடன்தான் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
தெற்காசியாவில் பெரிய நாடு, இந்தியா. எனவே இலங்கைத் தமிழர்களின் நியாயமான இந்த சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியாஆதரவு தர வேண்டும். அமைதி மற்றும் கெளரவத்துடன் இலங்கைத் தமிழர்கள் வாழ இந்தியா உதவி புரிய வேண்டும் என்றுகூறியிருந்தார் தணிகாச்சலம்.
இதற்கிடையே, ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.தணிக்சாசலத்தின் பேட்டிக்கு பதிலளிப்பது போல வெளியிட்ட அறிக்கையில், ராணுவம் தொடர்ந்து யாழ் பகுதியில்நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும். அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை இது தொடரும். புலிகளின் கோரிக்கையை ஏற்றுநாங்கள் ஏமாறத் தயாரில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications