மாருதி நிறுவனத்தை வாங்க சுசூகி-ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டு முயற்சி
டெல்லி;
மாருதி கார் நிறுவனத்தை வாங்க கடும் போட்டி நிலவுகிறது.
ஜப்பானின் சுசூகி நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து மாருதி-சுசூகி கார் நிறுவனத்தை உருவாக்கின. இப்போதுஅனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கி வரும் மத்திய அரசு மாருதி நிறுவனத்தையும் முழுவதுமாகதனியாரிடம் விற்றுவிடத் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து அரசிடம் உள்ள 50 சதவீத மாருதி நிறுவன பங்குகளை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த பங்குகளை தானே வாங்கிவிட சுசூகி நிறுவனம் நினைக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்திடம் மாருதியின்50 சதவீத பங்குகள் உள்ளன. மீதி பங்குகளையும் வாங்குவதன் மூலம் இந்தியாவின் மாருதி கார் நிறுவனம்முழுவதுமாக சுசூகியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
ஆனால், இந்தப் போட்டியில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டாஸ்சும் குதிக்கத் திட்டமிட்டிள்ளதாகத் தெரிகிறது.ஆசியாவில் கார் தொழிலில் தீவிரமாக ஈடுபடத் திட்டமிட்டுள்ள ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் மாருதியைஎப்படியும் கைப்பற்றிவிடத் துடிக்கிறது.
சுசூகி நிறுவனத்திலும் ஜெனரல் மோட்டர்ஸ் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது. சுசூகியின் 20 சதவீத பங்குகள்இப்போது ஜெனரல் மோட்டர்சிடம் தான் உள்ளது. இந்த இரு நிறுவனங்களுமே கிட்டத்தட்ட இணைந்து தான்செயல்பட்டு வருகின்றன.
இதனால், இந்த இரு கார் தயாரிப்பு நிறுவனங்களுமே இணைந்து மாருதியை வாங்க முயற்சிக்கலாம் எனத்தெரிகிறது.
ஆனால், தனது பங்குகளை இந்திய அரசு எப்படி விற்கப் போகிறது என்பதில் தான் இனி எல்லாமேஅடங்கியிருக்கிறது. பங்குகளை மொத்தமாக ஒருவருக்கே விற்க இந்திய அரசு முன் வந்தால் ஜெனரல்மோட்டர்ஸ்-சுசூகி இணைந்து அதை வாங்கிவிடும்.
அப்படி இல்லாமல் தன்னிடம் உள்ள பங்குகளை பலருக்கு இந்திய அரசு விற்றால் அதை சுசூகியோ, ஜெனரல்மோட்டார்ஸோ அல்லது இருவருமே இணைந்தோ வாங்குவார்களா என்பது சந்தேகமே. மாருதி நிறுவனத்தில்மேலும் பல நிறுவனங்களுக்கு பங்கு இருப்பதை இவர்கள் விரும்ப மாட்டார்கள்.
எப்படியிருந்தாலும் இந்திய அரசிடமிருந்து மாருதியின் பங்குகளை வாங்க 3,600 கோடி ரூபாய் வேண்டும்.சுசூகியிடம் 9,000 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இதனால், மிக எளிதாக இந்திய பங்குகளை வாங்கிவிட முடியும்.
அதே நேரத்தில் மாருதியின் பங்குகளை வாங்க இந்தியாவின் ஸ்கூட்டர் நிறுவனமான பஜாஜும் ஆர்வம்காட்டுகிறது. ஆனால், பஜாஜிடம் 1,800 கோடி ரூபாய் தான் உள்ளது. இதனால், பஜாஜ் நிறுவனத்தால் மாருதியைவாங்க முடியுமா என்பது சந்தேகமே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications