புதுவையில் 2001ல் பாமக ஆட்சியே
பாண்டிச்சேரி:
2001 ம் வருடம் பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சியே அமையும் என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமைதெரிவித்தார்.
பா.ம.க.யின் புதுவை லாஸ்பேட்டை தொகுதி மாநாடு லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் நடந்தது.
மாநாட்டில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது:
புதுவை மாநிலத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. இங்கே நல்லாட்சியே இல்லை எனக் கூறலாம். மக்கள் குறை தீர்க்கும் ஆட்சி அமைய நாங்கள்பாடுபட்டு வருகிறோம்.
வன்முறையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் வருங்காலத்தில் ஒரு துளி ரத்தம் கூடசிந்தக் கூடாது. வன்முறையில் பாமக வினர் ஈடுபட்டால் அவர்கள் மீது நானே நடவடிக்கை எடுப்பேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் புதுவையில் இல்லை. இடஒதுக்கீடு கோரி நாங்கள் பலமுறை போராடியுள்ளோம்.
புதுவையில் சில ஓநாய்கள் ஆட்டை மோதவிட்டு ரத்தம் குடிக்க நினைக்கிறது. ஆனால் நாங்கள் விழிப்பாக உள்ளோம்.
போலீஸாருக்கு டெல்லிக்கு இணையான சம்பளம் கிடைக்க நானே புதுவையில் ஊர்வலம் நடத்தினேன். புதுவை அரசியல்வாதிகள் தீமைதரும்தொழிற்சாலைகளை புதுவையில் அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இந்த தொழிற்சாலைகளினால் மண், நீர் மற்றும் காற்று போன்றவை மாசடைந்துவருகிறது என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications