நாக்பூர் டெஸட்: வலுவான நிலையில் இந்தியா
நாக்பூர்:
இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான இரண்டாவது கிரிக்கெட்டின்நான்காவது நாளான செவ்வாய்கிழமையன்று ஜிம்பாப்வே இந்தியாவின் பந்துவீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஃபாலோ ஆனுக்குத் தள்ளப்பட்டது.
இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 609 ரன் எடுத்தது. இதில்டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
400 ரன் எடுத்தால் ஃபாலோ ஆனை தவிர்கலாம் என்ற நிலையில் விளையாடத்தொடங்கிய ஜிம்பாப்வே மூன்றாவது நாளான திங்கள்கிழமையன்று 359 ரன்களுக்கு 6விக்கெட்டுகளை இழந்திருந்தது.
மேலும் 51 ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனை தவிர்க்கலாம் என 4-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது.ஆனால் 382 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் பெற்றது.
இந்தியத் தரப்பில் ஸ்ரீநாத் 81 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.ஜாகீர் கான் 78ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். சுனில் ஜோஷி 69 ரன்கள்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.
அஜித் அகார்கர் 59 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். எஸ் சிங் 70ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 4-வது நாளானசெவ்வாய்கிழமை ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள்எடுத்துள்ளது.காம்ப்பெல் 83 ரன்னுடனும், ஆன்டி பிளாவர் 88 ரன்களும் எடுத்துஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.
இந்திய தரப்பில் எஸ்.சிங் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை எஸ். சிங்கைப்பற்றியுள்ளார்.
இரண்டு இன்னிங்சின் மொத்த ரன்களையும் கூட்டினால் கூட ஜிம்பாப்வே இந்தியாவைவிட 11 ரன்னே அதிகம் பெற்றுள்ளது.
ஆட்டத்தின் இறுதி நாள் புதன் கிழமை நடைபெறும். ஜிம்பாப்வே அணியை குறைந்தரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இந்தியா வெற்றி பெற முயற்சி செய்யும். ஆனால்ஜிம்பாப்வே அணியினர் நிதானித்து ஆடி ஆட்டத்தை டிரா செய்யவாவது முயல்வர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications